/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கீழத்தாழனுார் பள்ளியில் குறு மைய கலை திருவிழா
/
கீழத்தாழனுார் பள்ளியில் குறு மைய கலை திருவிழா
ADDED : ஆக 29, 2025 02:53 AM
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் உயர்நிலைப் பள்ளியில் குறு மைய கலை திருவிழா போட்டி நடந்தது.
போட்டியில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பெரியனுார், மொகலார், பழங்கூர் உள்ளிட்ட குறு மைய அளவிலான 11 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தணிகாசலம், தன்னார்வலர் செந்தில்குமார்  குத்து விளக்கேற்றினர். கீழத்தாழனுார் ஊராட்சி தலைவர் சுரேஷ்  போட்டிகளை துவக்கி வைத்தார். பொறுப்பு தலைமை ஆசிரியர் அருள்மொழி வரவேற்றார்.
மாணவர்களுக்கு தனித்திறன் மற்றும் குழு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை பழங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராஜி நன்றி கூறினார்.

