/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூத்தாண்டவர் கோவில் சித்திரை விழா; முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
/
கூத்தாண்டவர் கோவில் சித்திரை விழா; முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
கூத்தாண்டவர் கோவில் சித்திரை விழா; முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
கூத்தாண்டவர் கோவில் சித்திரை விழா; முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஏப் 08, 2025 06:31 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோவில் சித்திரை விழா உற்சவத்திற்கு அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடக்கும் சித்திரைப் விழா உற்சவ முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேசியதாவது:
கூவாகம் கிராமத்தில் நடக்கும் கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா உற்சவ திருவிழாவிற்கு உலகம் முழுதும் இருந்து திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பர்.
இவ்விழாவிற்கு காவல் துறை சார்பாக தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்குவரத்து இடையூறு இல்லாமல் திருவிழாவிற்கு வாகனங்கள் வந்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை செய்திட வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதே போன்று, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பேரூராட்சி சார்பில் திருநங்கைகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.
திருவிழா நடைபெறும் நாட்களிலும், பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். திருவிழா நடைபெறும் இடத்தில் தீயணைப்புத் துறையின் சார்பில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருக்க வேண்டும். விழா எவ்வித இடையூறுமின்றி சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் துணை ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

