/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூவனூர் - சாங்கியம் பாலம்: அமைச்சர் ஆய்வு
/
கூவனூர் - சாங்கியம் பாலம்: அமைச்சர் ஆய்வு
ADDED : ஜூலை 10, 2025 09:22 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் - சாங்கியம் இடையே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலத்தை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் அடுத்த கூவனுார் - சாங்கியம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றில், 350 மீட்டர் நீளத்திற்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் மட்ட பாலம் 25.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
இதனை நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பணியின் தற்போதைய நிலை, கட்டுமானத்தின் தரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின், பணியை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதி காரிகளிடம் அறிவுறுத்தினார்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் தலைமை பொறியாளர் செந்தில், கண்காணிப்பு பொறியாளர் பரந்தாமன், கோட்ட பொறியாளர் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர் பத்மநாபன் உள்ளிட்ட நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

