ADDED : அக் 28, 2024 10:35 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் கோவல் தமிழ் சங்கத்தின் 92வது ஆண்டு விழா நடந்தது.
சங்கத்தின் தலைவர் உதியன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் முருகன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா கபிலர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பண்பாட்டுக் கழக துணைத் தலைவர் முருகன், உறைவிட நடுநிலைப்பள்ளி செயலாளர் சீனிவாசன், ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். தமிழ் சங்க செயலாளர் பாரதி மணாளன் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் முத்தமிழ்ச்செல்வன், பொருளாளர் குரு ராஜன் துவக்க உரையாற்றினர். வழக்கறிஞர் ரஜினிகாந்த், விழுப்புரம் கல்வெட்டு ஆய்வாளர் மங்கையர்க்கரசி, மணம்பூண்டி தணிகை கலைமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்ச் சங்கத் தலைவர் உதியன் எழுதிய வீரட்டானேஸ்வரர் மற்றும் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலின் தல வரலாறு கல்வெட்டு ஆய்வு நுாலை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் வெளியிடார்.
தொழிலதிபர் முருகன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆசைத்தம்பி, கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் நூலின் கருத்துக்களை விவரித்து பேசினர் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.