/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரவல்லி
/
கள்ளக்குறிச்சி கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரவல்லி
கள்ளக்குறிச்சி கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரவல்லி
கள்ளக்குறிச்சி கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரவல்லி
ADDED : ஜன 16, 2024 06:29 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது.
பாவை நோன்பிருந்து திருமாலை வழிபட்ட ஆண்டாள் நாச்சியார், திருமாலின் திருவடியை அடைந்த நாளையே கூடாரவல்லி தினமாக கொண்டாடி வருகிறோம். அதன்படி ஆண்டாள் பாவை விரதம் இருந்து நிறைவுற்ற நாளில் கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியின் நிழல் கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரவல்லி வைபவம் நடத்தப்பட்டது. ஆண்டாள் கோஷ்டினர் திருப்பாவை சேவித்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஆண்டாள் கோஷ்டியினருக்கு புடவை, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது. ரேவதி, ஜோதி, சாந்தி, ஆர்த்தி, சாஜிதா உள்ளிட்ட ஆண்டாள் கோஷ்டினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வைஷ்ணவ கைங்கரிய டிரஸ்ட் வினோத், சுப்ரமணியன், நாராயணன், நாகராஜ், சந்தோஷ், அருண், சந்தானம் செய்திருந்தனர்.