/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாநில அளவிலான தடகள போட்டி வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
/
மாநில அளவிலான தடகள போட்டி வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
மாநில அளவிலான தடகள போட்டி வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
மாநில அளவிலான தடகள போட்டி வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
ADDED : நவ 16, 2024 05:07 AM

கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை சி.இ.ஓ., பாராட்டினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி., விளையாட்டு அரங்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த 6ம் தேதி முதல் 11 ம் தேதி வரை நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து குழு போட்டிகள் மற்றும் ஓட்டபந்தயம், நீளம் தாண்டுல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் தடகள விளையாட்டுப் போட்டிகளில் 155 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் சங்கராபுரம் அடுத்த ஈருடையாம்பட்டு புனித வின்னரசி உயர்நிலைப் பள்ளி மாணவி அஷ்மியா, உயரம் தாண்டுதல் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., அலுவலகத்தில் சி.இ.ஓ., கார்த்திகா, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அஷ்மியாவை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.