/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையில் கிடந்த 9 சவரன் நகை போலீசில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டு
/
சாலையில் கிடந்த 9 சவரன் நகை போலீசில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டு
சாலையில் கிடந்த 9 சவரன் நகை போலீசில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டு
சாலையில் கிடந்த 9 சவரன் நகை போலீசில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டு
ADDED : அக் 16, 2024 04:15 AM

திருக்கோவிலுார் : சாலையில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த பூக்கடை பெண்ணிற்கும், டீக்கடை மாஸ்டரையும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.
திருக்கோவிலூர், மேலவீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி சரோஜா, 43; பஸ் நிலையம் அருகே சாலையோரம் பூ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில் கடைக்கு முன்பாக இருந்த குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார். அப்பொழுது பாக்கெட் ஒன்றில் நகை இருப்பதை கண்டெடுத்து அருகில் இருந்த டீக்கடை மாஸ்டர் கோவிந்தனிடம், 34; தெரிவித்தார். போலீசில் ஒப்படைக்க முடிவு செய்து, இருவரும் திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனிடம் நகையை கொடுத்தனர்.
முன்னதாக திருக்கோவிலுார் அடுத்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 57; விவசாயி. வங்கியிலிருந்து நகையை மீட்டுக் கொண்டு, ஊருக்கு செல்வதற்காக பஸ் நிலையம் சென்றபோது, 9 பவுன் நகையை தவற விட்டு விட்டதாக போலீசில் புகார் அளித்து விட்டு நின்று கொண்டிருந்தார்.
நகையை கண்டெடுத்தவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்ததை கண்ட நகையின் உரிமையாளர் மற்றும் போலீசார் அவர்களின் நேர்மையை கண்டு போலீசார் இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
நகையைத் தவறவிட்ட திருநாவுக்கரசு அதனை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஏழ்மை நிலையிலும் நேர்மை தவறாமல் சாலையில் கிடந்த நகையை போலீஸிடம் ஒப்படைத்த பூ விற்கும் பெண்ணிற்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.