/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மண்மலை கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்
/
மண்மலை கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 17, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் :கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை கிராமத்தில் கருப்பனார், அங்காளம்மன், விநாயகர் கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம், சுவாமி சிலைகள் பிரதிஷ்டையுடன் துவங்கியது.
தொடர்ந்து நேற்று காலை 4:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின், இரண்டாம் கால பூஜையுடன் கடம் புறப்பாடாகி 20 அடி உயர கருப்புசாமி சிலைக்கும், தொடர்ந்து அங்காளம்மன், விநாயகர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.