/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய வழக்கில் 16வது நபருக்கு 'குண்டாஸ்'
/
கள்ளச்சாராய வழக்கில் 16வது நபருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 28, 2024 06:57 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19ம் தேதி கள்ளச்சராயம் குறித்து 68 பேர் இறந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., வினோத்சாந்தாராம் பரிந்துரையை ஏற்று, இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சூ.பாலப்பட்டு கோதண்டம் மகன் கண்ணன், 40; என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் நேற்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகல், கடலுார் மத்திய சிறையில் உள்ள கண்ணனிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழங்கினர்.