ADDED : பிப் 19, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயமணி மற்றும் போலீசார், வடதொரசலுார் அடுத்த ரீட்டா நகரில் அம்புரோஸ், 56; என்பவரின் பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு குட்கா விற்றது தெரியவந்தது. உடன் அம்புரோசை கைது செய்து 60 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.