/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது
/
சிறுவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது
சிறுவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது
சிறுவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளி கைது
ADDED : நவ 25, 2024 06:18 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே வீடியோ கேம் விளையாடிய சிறுவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கலியமலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல், 48; கூலித்தொழி லாளி. இவரது மகன் ஹரிகரன், 15; பக்கத்து வீட்டைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஸ்டாலின், 15, இருவரும் கொள்ளுமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம் ராஜவேல் மது அருந்திவிட்டு போதையில் வீட்டில் படுத்து துாங்கினார். அப்போது, வீட்டு வாசலில் ஹரிகரனும், ஸ்டாலினும் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு சத்தம் போட்டுள்ளனர்.
துாங்குவதற்கு இடையூறாக இருந்ததால் ராஜவேல், அவர்களை கண்டித்தார். தொடர்ந்து, சத்தம் போட்டபடி வீடியோ கேம் விளையாடியதால் ஆத்திரமடைந்த ராஜவேல், பைக்கிற்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை சிறுவர்கள் மீது ஊற்றி தீ வைத்தார்.
சுதாரித்த ஹரிகரன் தப்பியோடி விட்டார். அருகில் உட்கார்ந்திருந்த ஸ்டாலின் மீது பெட்ரோல் பட்டு தீப்பிடித்துக்கொண்டது.
அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட ஸ்டாலின், சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
இது குறித்து ஸ்டாலின் தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜவேலை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.