ADDED : மார் 15, 2026 03:24 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய வாலிபர், குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சங்கராபுரம் அடுத்த தாவடிப்பட்டை சேர்ந்த கொளஞ்சி மகன் கோவிந்தராஜ், 36; வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து, ஊராங்கனியில் உள்ள மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 12ம் தேதி காலை 10.15 மணிக்கு குடும்ப பிரச்னை காரணமாக கோவிந்தராஜ் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை குடித்தார்.
உடன் அவரை சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் முதல்உதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்து கோவிந்தராஜ் தாய் பாவாமி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
