ADDED : ஏப் 13, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் விவசாய கூலித் தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணாபுரத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் சுப்ராயன், 60; விவசாய கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் இருப்பதால் உடல்நலம் பாதித்தது. கடந்த 7ம் தேதி இரவு 8:00 மணியளவில் போதையில் இருந்த சுப்ராயன் தனது நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் துாக்கு போட்டுக்கொண்டார்.
உடன், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
