UPDATED : அக் 07, 2026 10:01 PM
ADDED : அக் 07, 2026 09:15 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் பூச்சிக்கொள்ளி மருந்தினை குடித்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் முனியன்,46; கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ள முனியனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். இதற்காக முனியன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி முனியனுக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளது. வலி தாங்க முடியாததால் முனியன் மதுவுடன் பூச்சிக்கொள்ளி மருந்தினை குடித்து மயங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் முனியனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியன் நேற்று உயிரிழந்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
