/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குளத்தில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
/
குளத்தில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
ADDED : அக் 28, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துாபேட்டை அருகே குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துாபேட்டை அடுத்த நொனையவாடி பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள், 49; கூலி தொழிலாளி. நேற்று முனதினம் இரவு 8.45 மணிக்கு, அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகில் உள்ள சிறுபாலத்தில் படுத்திருந்தார். அப்போது திடீரென பாலத்திலிருந்து தவறி தண்ணீரில் விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை செல்லும் வழியில் இளைபெருமாள் இறந்தார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

