/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாறை வெடித்து சிதறியதில் கூலி தொழிலாளி படுகாயம்
/
பாறை வெடித்து சிதறியதில் கூலி தொழிலாளி படுகாயம்
ADDED : டிச 23, 2024 11:10 PM

திருக்கோவிலூர்; அரகண்டநல்லூரில் முஸ்லிம் அடக்கஸ்தல சீரமைப்பு பணியின் போது பாறையை உடைப்பதற்காக வைத்த ஜெலட்டின் வெடியில் சிக்கி தொழிலாளி படுகாய மடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர், ஜூம்மா மசூதிக்கு சொந்தமான முஸ்லிம் அடக்கஸ்தலம், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ளது. இது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பாறைகளை உடைப்ப தற்காக ஜெலட்டின் உள் ளிட்ட வெடிப்பொருட்களை பயன்படுத்தி டிராக் டர் மூலம் கல்லை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
எதிர்பாராத விதமாக பாறை வெடித்து சிதறியதில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த சவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் பழனி, 54; பலத்த காயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.