ADDED : பிப் 04, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூலித் தொழிலாளி தன்னைத்தானே தலையில் சுத்தியால் அடித்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்துார்பேட்டை அடுத்த அலங்கரி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால், தனிமையில் மனமுடைந்த நிலையில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில், சுத்தியால் தன்னைத் தானே தலையில் தாக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.