ADDED : செப் 27, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே வாய்க்காலில் இறந்து கிடந்தவர் குறித்து தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வெள்ளம்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுமகன் குமார், 42; 25ம் தேதி மாலை 5:00 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
நேற்று முன்தினம் மதியம் தேவனுார் கூட்ரோடு அருகே உள்ள பெரிய வாய்க்காலில் இறந்து கிடந்தார். கல்வெட்டு கட்டையில் உட்கார்ந்திருந்தவர் தவறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிகிறது.
இறந்தது தனது மகன்தான் என்பதை உறுதி செய்த அவரது தாயார் சரோஜா, 60; கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
