/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மோசமாகி வரும் கல்வித்தரம்; மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
/
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மோசமாகி வரும் கல்வித்தரம்; மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மோசமாகி வரும் கல்வித்தரம்; மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மோசமாகி வரும் கல்வித்தரம்; மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
ADDED : அக் 01, 2024 07:05 AM
உளுந்துார்பேட்டை அருகே ஆதிதிராவிடர் நல பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் ஒரே அறையில், ஒரே ஆசிரியரை கொண்டு பாட கற்பிக்கும் அவலம் உள்ளது.
உளுந்துார்பேட்டை தாலுகாவில் மதியனுார், காட்டுநெமிலி, ஒலையனுார், வெள்ளையூர் காலனி, செம்மணங்கூர், ஆதனுார், சேந்தமங்கலம், பு.மாம்பாக்கம், எடைக்கல், சேந்தநாடு உள்ளிட்ட 10 கிராமங்களில் ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. இந்த 10 பள்ளிகளில் 10 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களில் 5 தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 19 ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். காலியாக உள்ள 17 பணியிடங்களுக்கு, பள்ளி மேலாண்மை குழு மூலம் 12 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு 17 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதோடு கல்வி தரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஒரு சில பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர்கள் இருப்பதால் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வரை ஒரே வகுப்பறையில் மாணவ, மாணவியர்களை அமர வைத்து பாடம் நடத்துகின்றனர்.
கடந்த 1950ம் ஆண்டில் துவக்கப்பட்டு வெள்ளி விழா காண இருக்கின்ற மதியனுார் ஆதிதிராவிடர் நல ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். 2 ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 2017ம் ஆண்டு முதலே காலியாகவே உள்ளது.
மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட 2 ஆசிரியர்களும் பணியிலிருந்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் மாற்றுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதோடு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

