/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலி ஆவணம் மூலம் நில மோசடி: திருக்கோவிலுாரில் ஒருவர் கைது
/
போலி ஆவணம் மூலம் நில மோசடி: திருக்கோவிலுாரில் ஒருவர் கைது
போலி ஆவணம் மூலம் நில மோசடி: திருக்கோவிலுாரில் ஒருவர் கைது
போலி ஆவணம் மூலம் நில மோசடி: திருக்கோவிலுாரில் ஒருவர் கைது
ADDED : மார் 18, 2025 04:42 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் பகுதியில் போலி ஆவணங்களை தயார் செய்து, நில மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த செங்கனாங்கொல்லையை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ரங்கசாமி. இவருக்கு சொந்தமான அதே பகுதி யில் உள்ள 10 சென்ட் நிலத்தை, கண்டாச்சிபுரம் அடுத்த அருணாபுரம் கோதண்டராமன் மகன் சீனிவாசன், 54; காட்டுஎடையார் ராஜேந்திரன் மற்றும் சிலர் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்தனர்.
திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், ரிஷிவந்தியம், அரகண்டநல்லுார் பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் சீனிவாசன் உள்ளிட்டோர் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்தது தெரிந்தது. அவர்கள் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், திருக்கோவிலுார் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் நின்றிருந்த சீனிவாசனை, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பிடித்து விசாரித்தனர். அப்போது, சீனிவாசன் கூறுகையில், திருக்கோவிலுார் மற்றும் அரகண்டநல்லுார் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திர எழுத்தர்களுக்கு துணையாக இருந்து கொண்டு, பத்திரம் எழுதிக் கொடுக்கும் பணி செய்து வந்தேன். காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது மைத்துனர் ஏழுமலை, மின் துறையில் பணியாற்றி இறந்து விட்டர். அவரது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வந்துள்ளது. ஏழுமலை மனைவி மலர் என்பவருக்கு நிலம் வாங்கி கொடுக்க வேண்டும் என கூறி என்னை அணுகினார்.
அதற்காக, செங்கனாங்கொல்லை ரங்கசாமிக்கு, சொந்தமான 10 சென்ட் நிலத்தை மலர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க திட்டமிட்டேன். அதற்கு ரங்கசாமி இறந்து விட்டதாகவும், அவரது வாரிசாக அதே பகுதியை சேர்ந்த பத்மாவதியை ஏற்பாடு செய்தேன். இதற்காக, போலி ஆவணங்கள் தயார் செய்து, கடந்த 2022ம் ஆண்டு மே 12ம் தேதி திருக்கோவிலுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தோம்.
இதில் சந்தேகம் ஏற்படாததால், ரிஷிவந்தியம், அரகண்டநல்லுார் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் 5க்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் மூலம் பலரது சொத்துக்களை அபகரித்து பத்திரப்பதிவு செய்ததாக கூறினார்.
போலீசார் சீனிவாசனை கைது செய்து, தலைமறைவாக உள்ள ராஜேந்திரன் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்தவர்கள், மலர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.