sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலி சான்று அளித்து இடம் அபகரிப்பு: தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்கு

/

போலி சான்று அளித்து இடம் அபகரிப்பு: தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்கு

போலி சான்று அளித்து இடம் அபகரிப்பு: தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்கு

போலி சான்று அளித்து இடம் அபகரிப்பு: தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 07, 2025 02:53 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலி வாழ்நாள் சான்று அளித்து இடத்தை அபகரித்தது தொடர்பாக சார் பதிவாளர், தாசில்தார் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கேசவலு நகரை சேர்ந்தவர் முகமதுஆசிப், 36; இவர், தனது தந்தை சம்சுதீனுடன் சேர்ந்து கடந்த 2007ம் ஆண்டு 2,840 சதுர அடி நிலம் வாங்கினர். 2011ம் ஆண்டு தந்தை சம்சுதீனுக்கு நிலத்திற்கான பொது அதிகாரம் கொடுத்துவிட்டு முகமது ஆசிப் வெளிநாடு சென்றார்.

முகமது ஆசிப்பின் இடம் ரயில்வே துறைக்கு தேவைப்பட்டது. இடத்தின் உரிமையாளர்களான சம்சுதீன் மற்றும் முகமதுஆசிப் இருவரது பெயரையும் குறிப்பிட்டு, கடந்த 2017ம் ஆண்டு டிச., மாதம் அரசிதழில் அறிவிப்பு வெளியானது. இருவரும் விசாரணைக்கு வருமாறு டி.ஆர்.ஓ., மூலம் கடந்த 2022ம் ஆண்டு சம்மன் அனுப்பபட்டது. அப்போது, முகமதுஆசிப் வெளிநாட்டில் இருந்தார்.

இந்நிலையில், சம்சுதீன் தனது மூன்றாவது மனைவி என கூறப்படும் சாய்ராபானுவுடன் சேர்ந்து, டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் ஆஜராகி, ரயில்வே துறை கேட்ட இடம் தங்களுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்து கையெழுத்திட்டனர். அப்போது, நிலத்திற்கான இழப்பீடு தொகை பெற சில சான்றிதழ்கள் வேண்டும் என ரயில்வே துறை கேட்டது.

தொடர்ந்து, இருவரும் முகமதுநாசர் என்பவருடன் சேர்ந்து, வெளிநாட்டில் உள்ள மகன் முகமதுஆசிப்புக்கு போலியாக வாழ்நாள் சான்று தயாரித்தனர்.

அதன் மூலம் கள்ளக்குறிச்சி 2 வது இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், 2022ம் ஆண்டு 1,420 சதுர அடி நிலத்தை சாய்ராபானு பெயரில் கிரையம் செய்து அபகரித்தனர்.

இது குறித்து முகமதுஆசிப் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், நிலத்தை அபகரித்த சாய்ராபானு, தந்தை சம்சுதீன், முகமதுநாசர், கள்ளக்குறிச்சி 2வது இணை சார்பதிவாளர் அலுவலக சார் பதிவாளர், கள்ளக்குறிச்சி வி.ஏ.ஓ., இந்தியன் ரயில்வே விசாரணை அலுவலர், தெற்கு ரயில்வே நிலம் கையகப்படுத்தும் தனி தாசில்தார் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us