ADDED : மார் 23, 2025 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ்சில் லேப்டாப் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் சந்தோஷ்குமார், 25; இவர் கடந்த 21ம் தேதி இரவு சென்னையில் இருந்து அரசு பஸ்சில் ஆத்துாருக்கு சென்றார்.
அதிகாலை காலை 4:30 மணியளவில் ஆத்துார் சென்று பார்த்த போது, அவர் கொண்டு சென்ற லேப்டாப் காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
அப்போது, அருகில் அமர்ந்திருந்தவர், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஒருவர் லேப்டாப்புடன் இறங்கியதை பார்த்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து சந்தோஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.