/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் பீளமேட்டில் துவக்க விழா
/
உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் பீளமேட்டில் துவக்க விழா
உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் பீளமேட்டில் துவக்க விழா
உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் பீளமேட்டில் துவக்க விழா
ADDED : மே 31, 2025 12:32 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே நடந்த, 'உழவரைத்தேடி வேளாண்மை' திட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தியாகதுருகம் அடுத்த பீளமேடு கிராமத்தில், உழவர் நலத்துறை திட்டம் துவக்க விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஆனந்தராஜ், வார்டு உறுப்பினர் அயன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநர் ரகுராமன் பேசியதாவது:
விவசாயிகள் பயிர் சாகுபடியுடன் கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.
கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்கலை விஞ்ஞானிகளுடன் இணைந்து, உழவர்களை நேரடியாக சந்திக்கவும், அவர்களின் தேவைகளை தெரிந்து தொழில்நுட்பங்களை வழங்கி அதற்கான திட்டங்களை எடுத்துக்கூறவும், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாதந்தோறும் 2 மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் ஒன்றியத்தில் உள்ள 2 இரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முகாம் நடத்தப்படும். இதன் மூலம் அரசு சார்ந்த திட்டங்கள் அனைத்தும் உழவர்களுக்கு உடனடியாக சென்றடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உதவி வேளாண்மை அலுவலர் துரைராஜ் செய்தார். துணை வேளாண்மை அலுவலர் சிவனேசன் நன்றி கூறினார்.