/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சட்டம், ஒழுங்கு பிரச்னை: கலெக்டர் 'அட்வைஸ்'
/
சட்டம், ஒழுங்கு பிரச்னை: கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : மார் 18, 2025 04:09 AM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க, அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி., ரஜத் சதுர்வேதி முன்னிலை வகித்தார். இதில், மக்களின் பொது பிரச்னைகள், பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்றுதல், பொதுமக்களுக்கு இடையூறான இடங்கள், போராட்டங்கள் மற்றும் நடைபெற வாய்ப்புள்ள பிரச்னைகள், குற்ற சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, அறிவுறுத்தினார்.
டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், ஆர்.டி.ஓ., லுார்துசாமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் தனலட்சுமி மற்றும் தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.