ADDED : ஆக 25, 2026 04:02 PM
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே சட்டக்கல்லுாரி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் அபினேஷ் (எ) கார்த்திக், 21; சென்னையில் சட்டக்கல்லுாரியில் எல்.எல்.பி., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் கல்லுாரி விடுமுறைக்காக கார்த்திக் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு துாங்கச் சென்ற கார்த்திக் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இவரது பெற்றோர்கள் கதவை தட்டியும் கார்த்திக் திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது கார்த்திக் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
