தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்


ADDED : மார் 14, 2024 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார், : திருக்கோவிலுாரில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து நீதித்துறையும் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக திருக்கோவிலுார் நீதிமன்றத்தின் வழக்குகளின் எல்லை மறுவரையறை செய்யப்பட்டது.

இங்கிருந்த ஏராளமான வழக்குகள் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. இதனால் திருக்கோவிலுார் வழக்கறிஞர்களின் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருக்கோவிலுாரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும், வாணாபுரம் வட்டத்தை திருக்கோவிலுார் நீதிமன்ற எல்லையில் சேர்க்க வேண்டும். கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக நேற்று நீதிமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் சங்க செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். பொறுப்பு தலைவர் ராஜ்குமார், பொருளாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர்கள் ஆதிசங்கர், தங்கம், ராமதாஸ், தமிழ்ச்செல்வன், ரஜினிகாந்த், லட்சுமிகுமார், செந்தில்குமார், வழக்கறிஞர்கள் ராஜபாண்டியன், செந்தில்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். உண்ணாவிரத்துக்கு ஆதரவாக அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us