/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இ-பைலிங் முறையை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
/
இ-பைலிங் முறையை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறையை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறையை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 18, 2025 06:04 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள், இ பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் சங்க செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏ.ஆர்.இளையராஜா, இணை செயலாளர் ஆர்.இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் இ பைலிங் முறையை ரத்து செய்ய வேண்டும். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திவிட்டு இபைலிங் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவரை தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.