/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதையை ஒழிப்போம் விழிப்புணர்வு போட்டிகள்
/
போதையை ஒழிப்போம் விழிப்புணர்வு போட்டிகள்
ADDED : ஆக 09, 2025 06:57 AM
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதையை ஒழிப்போம் தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள், எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை, கட்டுரை மற்றும் குறும்படம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் குப்புசாமி, போதைப்பொருள் ஒழிப்பு எதிர்ப்பு மைய இணை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் நடுவர்களாக பங்கேற்றனர். கவிதை போட்டியில் அழகுமுதல்வன், ஐஸ்வர்யா, ராஜஸ்ரீ ஆகியோரும், கட்டுரை போட்டியில் வினோதினி, பிரேமலதா, கலையரசி, குறும்பட போட்டியில் மாணவர் துரை வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர். வரும் 11ம் தேதி போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றல், மனிதசங்கிலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

