ADDED : அக் 02, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, நைனார்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில் விற்பனை செய்த வி.பி.அகரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முருகேசன் 36, என்பவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.