ADDED : ஜன 09, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பிராந்தி விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ரோந்து சென்றார்.
அப்போது அங்கு அனுமதியின்றி பிராந்தி பாட்டில் விற்ற அதே ஊரை சேர்ந்த சின்னசாமி மகன் ஏழுமலை 36 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 பிராந்தி பாட்டில்கள் மற்றும் 320 ரூபாய் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிந்து, அவரை சிறையில் அடைத்தனர்.