ADDED : ஜன 10, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அரசம்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி பிராந்தி பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் ரமேஷ்,45; என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 6 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து, ரமேைஷ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோன்று பூட்டை கிராமத்தில் பொது இடத்தில் மது அருந்திய செம்பராம்பட்டு கன்னியப்பன், 60; நெடுமானுர் ரங்கசாமி மகன் நடராஜ் 29, சங்கராபுரம் வீரண்ணன் மகன் ராஜா, 33; ஆகியோரை கைது செய்தனர்.