ADDED : ஏப் 20, 2025 11:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு போலீசார், அரும்பரம்பட்டில், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் சுப்பிரமணியன் மகன் காசிலிங்கம், 41; என்பவர் மது பாட்டில்களை விற்றது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.