ADDED : அக் 02, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அருளம்பாடி பகுதியில் நேற்று மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவரிடம் இருந்து 180 மில்லி அளவுடைய 5 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் முருகன், 27;எனத் தெரியவந்திது. புகாரின் பேரில் போலீசார் முருகனை கைது செய்தனர்.