/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
/
குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
ADDED : மார் 19, 2025 04:52 AM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஜான்சன், 26; இவரது நிலத்தில் சாராயம் காய்ச்சி விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரரில், வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் கடந்த மாதம் பிப்ரவரி 22ம் தேதி சோதனை செய்து, 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஜான்சனை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி, ரஜத் சதுர்வேதி பரந்துரைப்படி, கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில், ஜான்சன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அதற்கான உத்தரவு, சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.