/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை பகுதியில் சாராயம், வெல்லம் பறிமுதல்
/
கல்வராயன்மலை பகுதியில் சாராயம், வெல்லம் பறிமுதல்
ADDED : செப் 01, 2025 11:39 PM
கள்ளக்குறிச்சி: கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் மதுவிலக்கு சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது, பட்டிவளவு தோம்புகாடு பகுதியில் முருகவேல் என்பவரது நிலத்தில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் வெல்லம், சாராயம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 26 மூட்டைகளில் இருந்த 1,300 கிலோ வெல்லம் மற்றும் 25 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, ராமு மகன் முருகவேல், 38; என்பவரை கைது செய்தனர். அதேபோல், மேட்டுவளவு கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவரது நிலத்தில் 6 சாக்கு மூட்டைகளில் இருந்த 300 கிலோ வெல்லம், 3 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.