/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2ம் தேதி மதுபான கடைகள் மூடல்
/
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2ம் தேதி மதுபான கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2ம் தேதி மதுபான கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2ம் தேதி மதுபான கடைகள் மூடல்
ADDED : செப் 29, 2025 11:56 PM
கள்ளக்குறிச்சி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 2ம் தேதி டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து மதுபான கூடங்களும் மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 2ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள உள்ள மதுபான பார்கள், தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அன்றைய நாளில் மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தால், டாஸ்மாக் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் நடவடிக்கை மேற்கொண்டு, உரிமைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.