
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பில் இலக்கிய விழா நடந்தது.
சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். ஓய்வு பெற்ற இணை இயக்குனர் சீனிவாசன், டாக்டர் வளவன் முன்னிலை வகித்தனர். மொழிப்போர் தியாகிகள் குறித்து கவிஞர் கலிய செல்லமுத்து பேசினார்.
வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், பிஸ்மி அறக்கட்டளைத் தலைவர் இனாயதுல்லா.
சங்கை தமிழ்ச் சங்க தலைவர் சுப்பராயன், ஆமினா அறக்கட்டளை இதயதுல்லா, ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் திருக்குறள் ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.