ADDED : அக் 14, 2024 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர் சங்கம் சார்பில் இலக்கிய விழா நடந்தது.
தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் சவுந்தர்ராஜன், அம்பேத்கார் முன்னிலை வகித்தனர். தீபாவளி பண்டிகை குறித்து வழக்கறிஞர் தமிழ்க்குமரன், வள்ளலாரை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்ற தலைப்பில் சுப்பராயன், உலக உணவு தினம் குறித்து ஆசிரியர் ரகுநந்தன் பேசினர்.
விழாவில் கவிஞர் கோவிந்தன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ஆமினா அறக்கட்டளை தலைவர் இதயதுல்லா, தேவதிருவருள், ஆசிரியர் லட்சுமிபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
செயலாளர் ஆண்டப்பன் நன்றி கூறினார்.