ADDED : செப் 22, 2026 07:22 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ்ச் சங்கத்தின் 252வது இலக்கிய தொடர் சொற்பொழிவு நடந்தது.
சங்கத் தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். தமிழறிஞர் நல்லாப்பிள்ளை, ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் கொளஞ்சியப்பா முன்னிலை வகித்தனர். கல்லை தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் அம்பேத்கர் வரவேற்றார். பாவலர் சண்முகப் பிச்சப்பிள்ளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். பொருளாளர் சண்முகம் திருக்குறள் அதிகாரத்திற்கு உரை விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, டாக்டர் உதயகுமார், ஜெயராமன், கோவிந்தராசன், சங்கராபுரம் சந்திரன் மதிவாணன், நடேசமணி, ஆசுகவி ஆராவமுதன் ஆகியோர் இலக்கிய சொற்பொழிவாற்றினர்.
முடியனுார் தலைமை ஆசிரியர் கோபால், அரங்கன் வள்ளியம்மை கவிதாலய துணை செயலாளர் அருள்ஞானம், சங்கைத் தமிழ் சங்க தலைவர் சுப்பராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
