/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் வார சந்தையில் ரூ.2.30 கோடிக்கு கால்நடை விற்பனை
/
தியாகதுருகம் வார சந்தையில் ரூ.2.30 கோடிக்கு கால்நடை விற்பனை
தியாகதுருகம் வார சந்தையில் ரூ.2.30 கோடிக்கு கால்நடை விற்பனை
தியாகதுருகம் வார சந்தையில் ரூ.2.30 கோடிக்கு கால்நடை விற்பனை
ADDED : ஆக 02, 2025 11:06 PM

தியாகதுருகம், : ஆடிப்பெருக்கு முன்னிட்டு தியாகதுருகம் வார சந்தையில் நேற்று ரூ.2.30 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.
ஆடிப்பெருக்கு பண்டிகையான இன்று, அசைவம் சாப்பிடுபவர்கள் இறைச்சி மீன் வாங்கி சமைப்பது குடும்பத்தினருடன் உண்டு மகிழ்வார். இதன் காரணமாக தியாகதுருகம் வார சந்தையில் நேற்று கால்நடை விற்பனை களை கட்டியது. வார சந்தையில் விற்பனைக்காக 840 ஆடுகள், 660 மாடுகள் கொண்டுவரப்பட்டது. வழக்கமாக இது போன்ற பண்டிகை காலத்தில், கிராமங்களில் உள்ளவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஆடுகளை வாங்கி வெட்டி இறைச்சியை பங்கிட்டு கொள்வர்.
இத்தகைய குழுவினர் நேற்று வார சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு குவிந்தனர். வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுடன் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கியதால் கால்நடைகள் அதிக விலைக்கு விற்பனையானது. இதனால் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று ஒரே நாளில் வார சந்தையில் ரூ. 2.30 கோடி மதிப்பில் கால்நடை வர்த்தகம் நடந்தது.