/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ.2,521 கோடி கடனுதவி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ.2,521 கோடி கடனுதவி
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ.2,521 கோடி கடனுதவி
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ.2,521 கோடி கடனுதவி
ADDED : அக் 19, 2025 11:55 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 38 ஆயிரத்து 942 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2,521 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து முறையாக பயிற்சி அளித்து ஒவ்வொரு குழுக்களும் செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 924 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 6.89 கோடி ரூபாய் மதிப்பில் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 744 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 11.40 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 38,942 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2,521 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. வாழ்வாதார கடனுதவியாக 6,276 மகளிர் சுய உதவிக்களுக்கு 5.55 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 570 நகர்ப்புற சுய உதவிக்குழுக்களுக்கு 57 லட்சம் ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 2021-23ம் ஆண்டு வரை 545 படித்த வேலை வாய்ப்பற்ற நகர்ப்புற இளைஞர்களுக்கு 98.86 லட்சம் ரூபாய் மதிப்பில் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.