/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லோன் தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை
/
லோன் தருவதாக மோசடி: போலீஸ் விசாரணை
ADDED : அக் 01, 2024 06:58 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு சதவீத வட்டிக்கு லோன் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு ஏழுமலை மகன் சக்திவேல், 22; ஐ.டி.ஐ., முடித்துள்ளார்.
இவருக்கு, கடந்த 6ம் தேதி வந்த மொபைல் போன் அழைப்பில், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், ஒரு சதவீத வட்டிக்கு 7 லட்சம் ரூபாய் லோன் தருவதாக கூறியுள்ளார்.
மேலும், டாக்குமெண்ட் சார்ஜ், இன்சூரன்ஸ் மற்றும் கமிஷன் தொகை கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதன் பேரில், அந்த மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்க, ஜிபே மூலம் 6 தவணைகளில் 84 ஆயிரத்து 992 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், லோன் தரவில்லை.
இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்த சக்திவேல், ஆன்லைன் மூலம் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதே போன்று,சங்கராபுரம் அடுத்த பழையனுார் சின்னப்பன் மனைவி லீமாஜூலி, 47; என்பவருக்கு, கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் மொபைல் போனில் லோன் தருவதாக அழைப்பு வந்துள்ளது.
அதனை நம்பி, லீமாஜூலி 8 தவணைகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
லோன் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த லீமாஜூலி ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.