/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லோக் அதாலத் : 222 வழக்குகளுக்கு தீர்வு
/
லோக் அதாலத் : 222 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 17, 2025 12:11 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதி சமரச மையத்தில் 222 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருக்கோவிலுார் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி முகமது அலி தலைமை தாங்கினார்.
முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீன் குமார், முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரேம்நாத் இரண்டாவது கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரசன்னா முன்னிலை வகித்தனர்.
முகாமில் மோட்டார் வாகன விபத்து, நிலம் பிரச்னை, வங்கிக் கடன், கல்விக் கடன் என 300க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், வாகன விபத்து, வங்கி வழக்குகள் உட்பட 222 வழக்குகளுக்கு, 94 லட்சத்து 60 ஆயிரத்து 592 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டை
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர், சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மதுமிதா, குற்றிவியல் நீதிமன்ற நீதிபதிகள் கோமதி, அஜித்சிங்ராஜா, வழக்கறிஞர்கள். நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர். மோட்டார் வாகன விபத்துக்கள், சிவில் வழக்குகள், குடும்ப வழக்குகள், குற்றவியல் வழக்குகள். வங்கி வழக்குகள் என 436 வழக்குகளுக்கு ஒரு கோடியே 53 லட்சத்து 999 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.