தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள் அவதி

குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள் அவதி

குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள் அவதி


ADDED : ஜூன் 30, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாகவே குறைவான மின்னழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், வீடுகளில் உள்ள எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அண்ணாநகர் அருகிலேயே உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த மின்னழுத்தத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us