ADDED : நவ 27, 2024 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, நவ.28-; கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் மாரிமுத்து, சிவாஜி, பழனி, ஏழுமலை, அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.
மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ஸ்டாலின்மணி, செயற்குழு உறுப்பினர்கள் பூவராகவன், சுப்ரமணின, ஏழுமலை கண்டன உரையாற்றினர்.
இந்திய அதிகாரிகளுக்கு 2029 கோடி லஞ்சம் ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வேண்டும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.