ADDED : டிச 23, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மா.கம்யூ., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார்.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், வட்டக்குழு உறுப்பினர்கள் சிவா, கொளஞ்சி, பரதன், மஞ்சுளா, மூத்த தலைவர்கள் பெரியசாமி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

