/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுரை ஆதீனத்தின் காரை உரசி சென்ற காரால் பரபரப்பு
/
மதுரை ஆதீனத்தின் காரை உரசி சென்ற காரால் பரபரப்பு
ADDED : மே 03, 2025 02:04 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மதுரை ஆதீனத்தின் காரை, பதிவெண் இல்லாத கார் உரசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆதீனம் ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சென்னை காட்டாங்கொளத்துாரில் நடக்கும் சைவ மாநாட்டில் பங்கேற்க, மதுரையில் இருந்து நேற்று 'இன்னாவோ' காரில் புறப்பட்டார்.
காலை 10:15 மணிக்கு, அவர் பயணித்த கார், உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் அருகே சர்வீஸ் சாலை வழியாக ரவுண்டானாவை சுற்றி கடந்து செல்ல முயன்றது.
அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பதிவெண் இல்லாத 'மாருதி' கார், ஆதீனம் சென்ற காரின் பின்புறம் உரசி விட்டு, வேகமாக சென்றது.
இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

