/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம்
/
உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம்
ADDED : நவ 08, 2025 02:15 AM

சங்கராபுரம்: தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நேற்று நடந்தது.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் ஏரிக்கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு மஹா சண்டி ஹோமம் நேற்று நடந்தது. அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உட்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ரவி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பங்கேற்று, உலக மக்கள் நன்மைக்காக மஹா சண்டி ஹோமம் நடத்தினர். தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை தேவபாண்டலம் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

