தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகா பெரியவர் ஜெயந்தி விழா

மகா பெரியவர் ஜெயந்தி விழா

மகா பெரியவர் ஜெயந்தி விழா


ADDED : ஜூன் 10, 2025 10:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 10:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலுார், பிராமணர் சங்கம் சார்பில், மகா பெரியவர் ஜெயந்தி விழா, கீழையூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து மகா பெரியவரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவபடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மண்டபத்தில் வைத்து கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், ஜெயதீ ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். கிளை தலைவர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமை தாங்கினார். உபதலைவர் சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பொருளாளர் ஸ்ரீநாத் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us