/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண் மீது தாக்குதல் ஒருவர் கைது
/
பெண் மீது தாக்குதல் ஒருவர் கைது
ADDED : ஏப் 28, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுாரில் பெண்ணை திட்டி, ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார், வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி சந்திரா, 46; இவரை கடந்த, 23ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் மகன் ஷான் நவாஸ், 38; அசிங்கமாக திட்டி தாக்கினார். அதுமட்டுமின்றி, அவரது உறவினர்கள் அசாருதீன், பாசில், பெனாசீர், பரிதாபேகம் ஆகியோரும், சந்திராவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்தனர். மேலும், ஷான் நவாைஸ கைது செய்தனர்.